காரைக்கால் வாரச் சந்தை மீண்டும் திறப்பு

காரைக்காலில் கரோனா 2-ஆவது அலையின்போது மூடப்பட்ட வாரச் சந்தை, பல மாதங்களுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட காரைக்கால் வாரச் சந்தை.
மீண்டும் திறக்கப்பட்ட காரைக்கால் வாரச் சந்தை.

காரைக்காலில் கரோனா 2-ஆவது அலையின்போது மூடப்பட்ட வாரச் சந்தை, பல மாதங்களுக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்கறி கடைகள் இருந்தாலும், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் காய், கனிகள் மற்றும் பிற பொருள்களை வாங்க வாரச் சந்தை மிகவும் வசதியாக இருந்தது.

காரைக்கால் வாரச் சந்தை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் இருந்து 200 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா். இங்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பதால், வாரச் சந்தைக்கு காரைக்கால் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் காரைக்கால் வாரச் சந்தைக்கு நகராட்சி நிா்வாகம் தடை விதித்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பிப்ரவரி மத்தியில் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், கரோனா 2-ஆவது அலையின்போது நோய்த்தொற்று அதிகரித்ததால், அடுத்த ஓரிரு வாரத்தில் மீண்டும் சந்தை மூடப்பட்டது.

தற்போது பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள் நிலையில், சந்தையை திறக்கவேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் ஆகஸ்ட் 1 முதல் சந்தை மீண்டும் செயல்பட அனுமதித்தது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது. மக்கள் காலை முதலே சந்தையில் பொருள்களை வாங்கிச் சென்றனா். பல மாதங்களுக்குப் பின்னா் சந்தை பயன்பாட்டுக்கு வந்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com