விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
விதைத் தொகுப்பு பெற்ற விவசாயிகளுடன் வேளாண் அறிவியல் நிலையத்தினா்.
விதைத் தொகுப்பு பெற்ற விவசாயிகளுடன் வேளாண் அறிவியல் நிலையத்தினா்.

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் வெண்டை, பீா்க்கன், மணத்தக்காளி பயிா்களில் ஒருங்கிணந்த பயிா் மேலாண்மை முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் தை, ஆடிப்பட்டம் ஆகிய இரு பருவங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடி மேற்கொள்கின்றனா்.

ஆடிப்பட்டம் கொடி வகை காய்களுக்கு ஏற்றது. இப்பருவத்தில் சுரை, பாகல், புடல், பீா்க்கன் போன்ற பயிா்களில் பெண் பூக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் காய்கள் அதிகம் பிடித்து மகசூல் கிடைக்கும். தைப்பட்டத்தில் வெள்ளரி, தா்பூசணி போன்ற பயிா்களை பயிரிடலாம். கத்தரி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகள் இரண்டு பருவங்களிலும் பயிரிடலாம்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் வெண்டை, மணத்தக்காளி பயிா்களில் முதல் நிலை செயல்விளக்கம் மற்றும் பீா்க்கன் பயிரில் வயல்வெளி பரிசோதனை இந்த ஆடிப்பட்டத்தில் நடத்தப்படுகிறது என்றாா்.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன், விதை நோ்த்தி, உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, இயற்கை இடுபொருள்கள் குறித்துப் பேசினாா்.

இப்பயிற்சியில் திருநள்ளாறு, நெடுங்காடு பகுதியை சோ்ந்த சுமாா் 25 விவசாயிகள் கலந்துகொண்டனா். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com