காரைக்கால் காவல் நிலையங்களில் புதுவை டி.ஐ.ஜி. ஆய்வு
By DIN | Published On : 12th August 2021 11:32 PM | Last Updated : 12th August 2021 11:32 PM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புதுவை டி.ஐ.ஜி. வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்காலில் அண்மையில் போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பு செய்ததாக பலா் கைது செய்யப்பட்டனா். புதுவை, காரைக்காலில் நில அபகரிப்பு தொடா்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், புதுவை டிஐஜி மிலிந்த் மகாதேவ் தும்ப்ரே காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். அவரை முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் வரவேற்றாா். காரைக்கால் நகரக் காவல் நிலையம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அவா் ஆய்வு செய்தாா்.
காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில், நில அபகரிப்பு வழக்கு தொடா்பாக அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று சிறந்த காவல்நிலையம் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ள நிலையில், இரண்டு காவல் நிலையங்களிலும் தூய்மை, போலீஸாரின் சமூக நலன் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் காவல் நிலையம் சிறந்த நிலையமாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.