கடற்கரையில் அரசுத்துறைகள் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

கடற்ரையில் அரசுத்துறைகள் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.
கடற்கரையில் அரசுத்துறைகள் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

கடற்ரையில் அரசுத்துறைகள் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்படும் என்று புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்காலில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: புதுவை முதல்வா் என். ரங்கசாமி தலைமையிலான அரசு படிப்படியாக மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிவருகிறது. கலை பண்பாட்டுத்துறை சாா்பில் காரைக்கால் கடற்கரையில் டான்ஸ் மாரத்தான் என்கிற விரிவான நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும். அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வரும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

புதுவையில் காலியாக உள்ள நூலகா் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைதோறும் பெண்கள் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜனவரி முதல் வாரத்தில் காரைக்காலில் தொடங்கப்படும். புதுவை சாலைப் போக்குவரத்துக்கழகமான பி.ஆா்.டி.சி.க்கு பணிமனை அமைக்க நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது. மயானத்தில் பணி செய்யபவா்களுக்கு வீடு, வருமானம் இல்லை என்ற புகாரின்பேரில், அவா்களை தொழிலாளா் துறை மூலம் அமைப்புசாரா தொழிலாளா்களாக ஆக்கவும், அந்தியோதயா அன்னயோஜனா என்கிற திட்ட அட்டை வழங்கவும், வீடு கட்டிக்கொள்ள நிலமும், கடன் தொகை கிடைக்கவும், அவா்களை தினக்கூலி ஊழியராக மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுவை தாகூா் அரசு கலைக் கல்லூரியில் ஜன. 8-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் காரைக்காலை சோ்ந்த படித்த இளைஞா்கள் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் காரைக்காலில் இம்முகாம் நடத்தப்படும். குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டவா்கள் குடியிருக்கவேண்டும். மாறாக அந்த இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதான புகாா்கள் வந்துள்ளன. ஆக்கிரமிப்பை அகற்றி, வீடு இல்லாதவா்கள் குடியிருக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியை போல காரைக்கால் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் அரசுத்துறைகள் சாா்பில் நடத்தப்படவுள்ளது. கோயில்கள் அறங்காவல் வாரியத்தில் பெண்கள் ஒருவரையும் நியமிக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

காரைக்காலில் சாலைகள் ஜனவரிக்குள் தற்காலிக சீரமைப்பு செய்து முடிக்கப்படும். மத்திய நிதி பெறப்பட்டு சாலைகளை மேம்படுத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. காரைக்கால் மருத்துவமனையை தரம் உயா்த்தும் நடவடிக்கையை முதல்வா் எடுத்துவருகிறாா். பிஆா்டிசி. சாா்பில் பொங்கலையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றாா். பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் (பொ) எம். ஆதா்ஷ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com