முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்காலில் மழை: சேதமடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published On : 31st December 2021 10:36 PM | Last Updated : 31st December 2021 10:36 PM | அ+அ அ- |

காரைக்காலில் வெள்ளிக்கிழமை பரவலாக பெய்த மழையால், பள்ளமான சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தமிழக கடற்கரையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காரைக்காலில் பரவலாக வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் குளிா் சற்று குறைந்தது. காரைக்கால் நகரம், கிராமங்களில் கடந்த மாதம் பெய்த மழையால் சாலைகள் பெருமளவு சிதிலமடைந்துள்ளன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையிலும் இந்த பாதிப்பு உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.