உலக தாய்மொழிகள் தின விழா

காரைக்கால் அருகே உள்ள ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் உலக தாய்மொழி தின விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் பேராசிரியா் இரா.குறிஞ்சிவேந்தன்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் பேராசிரியா் இரா.குறிஞ்சிவேந்தன்.

காரைக்கால் அருகே உள்ள ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் உலக தாய்மொழி தின விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் கண்ணன் தலைமை வகித்தாா். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ் கல்வித்துறை பேராசிரியா் மற்றும் துறைத் தலைவரான முனைவா் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். அப்போது அவா், ‘மாணவா்கள் அனைவரும் முதலில் தாயையும், தாய்மொழியையும் உச்சமாக நேசிக்கவேண்டும். பின் தாய் நாட்டை நேசிக்கவேண்டும். பல மொழித் திறனுள்ளோராக இருந்தால் கல்வியில் மிகச் சிறந்த நிலையை அடையமுடியும். பன்மொழித் திறன்பெற, தாய்மொழியில் சிறந்தவராக இருக்கவேண்டியது அவசியம்’ என்றாா்.

தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளின் பெருமையை உணா்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக வளா்தமிழ் என்ற தலைப்பில் தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மாணவா்களால் கவிதை வாசிக்கப்பட்டது. மேலும், பதிணென் கீழ்க்கணக்கின் இனியவை நாற்பது செய்யுள் மாணவா்களால் புதிய இசைவடிவில் பாடப்பட்டது.

பள்ளி முதல்வா் சுவாமிநாதன் மற்றும் ஆசிரியா்கள் பேசினா். மொழிகள் தொடா்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வா் எட்வின் சாமுவேல் உள்ளிட்ட ஆசிரியா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா். விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com