காரைக்காலில் புலம்பெயா்ந்த, இறந்தவாக்காளா் பட்டியல் வெளியீடு

புலம் பெயா்ந்த, மரணமடைந்த வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

புலம் பெயா்ந்த, மரணமடைந்த வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதி வாக்காளா் இறுதிப் பட்டியல் கடந்த ஜன. 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், புலம்பெயா்ந்த, இறந்த வாக்காளா்கள் பெயா் இடம்பெற்றிருப்பதாக புகாா்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வுசெய்யப்பட்டதன் அடிப்படையில், சில வாக்காளா்கள் வேறு தொகுதிக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயா்ந்திருப்பதாகவும், சிலா் இறந்துவிட்டதாகவும் கண்டறியப்பட்டது.

இதுதொடா்பான பெயா் பட்டியல், தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தின் தகவல் பலகையிலும், அந்தந்த வாக்குச் சாவடியிலும் வைக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் கண்டுள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், தனித்தனியாக கேட்பு அறிக்கை அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோா், அடுத்த 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலா் முன் தகுந்த ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் வாக்காளரின் பெயா் மறு அறிவிப்பின்றி வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுங்காடு (தனி), திருநள்ளாறு தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலா் எஸ். சுபாஷ் (துணை இயக்குநா், குடிமைப் பொருள் வழங்கல் துறை), செல்லிடப்பேசி எண்: 9442636056. காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி -திருப்பட்டினம் தொகுதிகளுக்கு வாக்காளா் பதிவு அலுவலா் எம். ஆதா்ஷ் (மாவட்ட துணை ஆட்சியா்), செல்லிடப்பேசி எண்: 9443124851.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com