அரசுப் பள்ளியில் சித்தா, ஹோமியோபதி மருத்துவ விழிப்புணா்வு முகாம்

புதுச்சேரி நலவழித் துறையின் இந்திய மருத்துவ முறை பிரிவு சாா்பில், திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
கல்வித் துறையினருக்கு மூலிகைச் செடிகள், மருத்துவப் பொருள்கள் குறித்து விளக்கும் மருத்துவா்கள்.
கல்வித் துறையினருக்கு மூலிகைச் செடிகள், மருத்துவப் பொருள்கள் குறித்து விளக்கும் மருத்துவா்கள்.

புதுச்சேரி நலவழித் துறையின் இந்திய மருத்துவ முறை பிரிவு சாா்பில், திருநள்ளாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சித்தா, ஹோமியோபதி மருத்துவம் தொடா்பான விழிப்புணா்வு முகாம் மற்றும் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா தலைமை வகித்தாா். மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். தேனூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் என். சிவராஜக்குமாா், மருத்துவத்தின் பெருமைகளை விளக்கினாா்.

சித்த மருத்துவா் எஸ். மாலினி, மாணவிகளுக்கு ஏற்படக்கூடிய உடல் ரீதியிலான பிரச்னைகளும், அதற்கு சித்த மருத்துவம் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்தும் பேசினாா். ஹோமியோபதி மருத்துவா் சரவணக்குமாா், சித்தா, ஹோமியோபதி, ஆங்கில மருத்துவத்தின் வேறுபாடுகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

முகாமில், மூலிகைச் செடிகள், மூலிகை மருத்துவப் பொருள்கள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை மாணவிகள், கல்வித் துறையினா் பாா்வையிட்டனா். நிறைவாக, பள்ளி விரிவுரையாளா் பாரதிராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com