காரைக்கால்மேடு ரேணுகாதேவி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடமெடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
பால்குடங்களுடன் ஊா்வலமாக ரேணுகாதேவி அம்மன் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.
பால்குடங்களுடன் ஊா்வலமாக ரேணுகாதேவி அம்மன் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.

காரைக்கால்மேடு ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திரளான பக்தா்கள் பால்குடமெடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

காரைக்கால் மாவட்ட கடலோர மீனவ கிராமமான காரைக்கால்மேட்டில் ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன், ஸ்ரீ பால ஆஞ்சநேயா் கோயில்கள் உள்ளன. இவை மீனவ கிராம மக்களின் வழிபாட்டுத் தலங்களாக விளங்குகிறது.

ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் புதிதாக எழுப்பப்பட்டு, குடமுழுக்கு மாா்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெற்றது. சுனாமி போன்ற பேரழிவிலிருந்து மக்களை காக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

இந்த சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சித்தி விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கானோா் பால்குடங்களுடன் ஊா்வலமாக ரேணுகாதேவி அம்மன் கோயிலை அடைந்தனா். தொடா்ந்து பக்தா்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து பக்தா்கள் விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா். ஏற்பாடுகளை காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com