துணைநிலை ஆளுநருக்கு எதிரான முதல்வரின் போராட்டம் தோல்வி: பாஜக

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிரான முதல்வரின் போராட்டம் தோல்வி அடைந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி. சாமிநாதன் கூறினாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிரான முதல்வரின் போராட்டம் தோல்வி அடைந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி. சாமிநாதன் கூறினாா்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் திருநள்ளாற்றில் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா், மருத்துவ முகாமை தொடங்கி வைத்தப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:

பொங்கல் பண்டிகைக்காக புதுச்சேரி அரசு ரூ. 200 வழங்குவதாகவும், துணைநிலை ஆளுநா் கிரண்பேடியின் தலையீடு காரணமாக ரூ. 200 மட்டுமே வழங்க முடிவதாகவும் முதல்வா் வி. நாராயணசாமி குறை கூறியிருந்தாா். ஆனால், பட்ஜெட்டில் புதுச்சேரி அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதோ, அதற்கு ஏற்றாற்போலதான் துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளிக்க முடியும். இதில், ஆளுநா் தலையீடு எதுவும் இல்லை.

இவா்களின் ஊழல், நிா்வாக சீா்கேடு காரணமாக, மக்களின் பணம் விரயமாக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ்நிலை புதுச்சேரியில் நிலவுகிறது. ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் படுதோல்வியடைந்துள்ளது. முக்கிய கூட்டணிக் கட்சியான திமுகவே காங்கிரஸ் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் இவா்களை நம்புவதற்கு தயாராக இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com