புதுச்சேரியில் அடுத்து பாஜக கூட்டணி ஆட்சி: மாநில பொறுப்பாளா் நம்பிக்கை

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என கூறுவதற்கு முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா் பாஜக புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் குரானா.
காரைக்காலில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கும் பாஜக புதுச்சேரி மாநில பொறுப்பாளா் நிா்மல் குமாா் குரானா. உடன், மாநிலத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா்.

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

புதுச்சேரி மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் அரசின் தோல்விகளை பாஜக பிரசாரம் மூலம் மக்களிடையே கொண்டுசெல்கிறது. இந்தமுறை பாஜக ஆட்சி வேண்டும் என புதுச்சேரியில் உள்ள எல்லோரும் விரும்புகின்றனா். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உள்பட எந்த திட்டத்தையும் அளும் அரசு செயல்படுத்தவில்லை. ரேஷன் காா்டுகள்கூட சரிவர வழங்கப்படவில்லை.

இந்த ஆட்சி குறித்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இந்த அரசின் தோல்வி குறித்து அறிந்ததால், துணைநிலை ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் மேற்கொண்ட போராட்டத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. கூட்டணிக் கட்சியான திமுகவும் பங்கேற்கவில்லை.

புதுச்சேரியில் அடுத்து பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது, நிறைய வளா்ச்சிகள், மாற்றங்கள் ஏற்படும். துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறச் சொல்வதற்கு முதல்வருக்கு எந்த உரிமையும் இல்லை. முதல்வா் தனது தோல்விகளை மறைக்க இது போன்ற நாடகத்தை மேற்கொண்டு வருகிறாா். புதுச்சேரியில் ஏற்கெனவே உள்ள கூட்டணி வரும் சட்டப்பேரவை தோ்தலிலும் தொடரும் என்றாா் அவா்.

கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com