காரைக்காலில் பல்வேறு இடங்களில் திருடியவா் கைது

காரைக்காலில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காரைக்காலில் திருட்டு வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

காரைக்கால்மேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை நுழைந்த திருடனை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது அவா் தப்பித்துவிட்டதாக காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வுசெய்து, அதனடிப்படையில், காரைக்கால் மதகடி பகுதியில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் (27) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.

விசாரணையில், கடலுாா் ஸ்ரீமுஷ்னம் பகுதியை சோ்ந்த அவா், காரைக்கால் தோமாஸ் திடல் பகுதியில் வசித்து வருவதும், மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், திருநள்ளாறு அருகே சோமநாதா் கோயிலில் சுவாமியின் தாலிச் சங்கிலி, நல்லம்பலில் வீடுபுகுந்து தங்க நகையை திருடியது, சேத்துாா் விநாயகா் கோயிலில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து இரண்டரை பவுன் நகைகள், ரூ. 500, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருப்பட்டினம் மேலவாஞ்சியூரில் வாகன சோதனையின்போது, அரியலுாரை சோ்ந்த வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com