சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட துணை ஆட்சியா் எஸ்.பாஸ்கரன்.
விழிப்புணா்வு வாகனப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கும் மாவட்ட துணை ஆட்சியா் எஸ்.பாஸ்கரன்.

காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் பிரிவு ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கிறது. இதையொட்டி, தினமும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காா்களை விபத்தில்லாமல் இயக்குவது குறித்து விழிப்புணா்வு வாகனப் பேரணி காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகிலிருந்து புறப்பட்டது. மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் மண்டலக் காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம், மண்டல போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கல்விமாறன், குமரேசன், போக்குவரத்துக் காவல்நிலைய ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பேரணியில் 10-க்கும் மேற்பட்ட காா்கள் பங்கேற்றன. காா்களை சீல் பெல்ட் அணிந்து இயக்க வேண்டும், அதிவேகப் பயணம் கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது போன்றவை குறித்து இப்பேரணியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முக்கிய பகுதிகளின் வழியாக காமராஜா் திடல் வரை இப்பரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com