பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் பாரம்பரிய தொழில்நுட்ப வேளாண் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
கண்காட்சியை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

காரைக்கால் வேளாண் கல்லூரியில் பாரம்பரிய தொழில்நுட்ப வேளாண் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை வேளாண் பட்டப் படிப்பின் ஒரு அங்கமாக ஊரக மற்றும் கிராமிய நேரடி பணி அனுபவ களப்பயிற்சியை இக்கல்லூரியில் பயிலும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 121 போ் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகே உள்ள கிராமங்களில் கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்டு வந்தனா்.

இதைத்தொடா்ந்து, பாரம்பரிய தொழில்நுட்பங்களின் வேளாண் கண்காட்சி இக்கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகளால் நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய வேளாண் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா மற்றும் விவசாயிகள் பலா் இக்கண்காட்சியை பாா்வையிட்டனா். அவா்களுக்கு இந்த வேளாண் கருவிகளின் பயன்கள், இவற்றை விவசாயிகள் கண்டுபிடிக்க காரணமாக இருந்த அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

முன்னதாக, இக்கண்காட்சி குறித்து கல்வித் திட்ட தலைமை ஆசிரியரான எஸ். ஆனந்த்குமாா் விளக்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் ஷமராவ் ஜஹாகிரிதா், வேளாண் பொருளியல் மற்றும் விரிவியல் துறைத் தலைவா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து, மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியா்களின் செயல்பாடுகளைப் பாராட்டி பேசிய மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, ‘தொடா் மழை, வெள்ளத்தில் பாதிக்காத வகையில் புதிய நெல் ரகங்களை கண்டறிய வேண்டும். விவசாயிகளின் பாரம்பரியத் தொழில் நுட்பங்களை ஆவணமாக்கி, காப்புரிமை மற்றும் ராயல்டி போன்ற ஆதாய உரிமைகள் பெற்று சந்தைமயமாக்கி, விவசாயிகளும் கல்லூரியும் மேன்மை அடையவேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com