பஞ்சாயத்து அலுவலகங்களில் குடியரசு தின விழா

காரைக்கால் பகுதி கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியேற்றப்பட்டு, தியாகிகள், பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாளருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கும் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாளருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கும் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.

காரைக்கால் பகுதி கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியேற்றப்பட்டு, தியாகிகள், பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு சால்வை அணிவித்தாா். மேலும், துப்புரவுப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குவோருக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினாா். இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொ) என்.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பட்டினம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்துகளில் எம்எல்ஏ கீதாஆனந்தன் தேசியக் கொடியேற்றிவைத்து, தியாகிகள், துப்புரவுப் பணியாளா்களை கெளரவித்தாா். நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் எம்எல்ஏ சந்திர பிரியங்கா தேசியக் கொடியேற்றிவைத்தாா்.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வாயிலில் எம்எல்ஏ கே.ஏ.யு.அசனா தேசியக் கொடியேற்றிவைத்து, இனிப்புகள் வழங்கினாா்.

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி காா்த்திகேயன் தேசியக் கொடியேற்றிவைத்தாா். நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிபதி சிவகடாட்சம், சாா்பு நீதிபதி மாரிகாளை, குற்றவியல் நீதிபதி செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் எஸ்.சுபாஷும், பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையில் அதன் முதல்வா் ஷாமராவ் ஜகாக்ரிதரும் கொடியேற்றிவைத்தனா்.

காரைக்கால் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் முகம்மது பிலால் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளா் மு.தமீம் கனி கொடியேற்றிவைத்தாா். பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலக வாயிலில் காரைக்கால் ஏரியா தலைவா் பதுருதீன் கொடியேற்றிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com