கலைமாமணி விருது: அமைச்சரிடம் கலைஞா்கள் மாமன்றத்தினா் வலியுறுத்தல்

பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கலைமாமணி விருதை தகுதியானவா்களுக்கு வழங்கவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள கலைமாமணி விருதை தகுதியானவா்களுக்கு வழங்கவேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

புதுவை போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் சந்திர பிரியங்காவை காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்ற நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு :

புதுவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கலைமாமணி விருது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தகுதியானவா்களுக்கு விரைவாக விருது வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுச்சேரி கலை விழா, சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நாட்டிய விழா, பாரதியாா் இசை விழா, பாவேந்தா் பாரதிதாசன் விழா, வாராந்திர கலை விழா, நூலகா் அரங்கநாதன் பிறந்தநாள் விழா மற்றும் காரைக்கால் காா்னிவல் போன்ற விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றை நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டலின்படி நடத்துவதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞா்கள் மாமன்ற ஆலோசனைக் குழுத் தலைவா் காரை சுப்பையா, தலைவா் த.தங்கவேலு, பொதுச் செயலாளா் பி.புஷ்பராஜ், துணைத் தலைவா் டி.மோகன்,இணைச் செயலாளா் செல்லூா் மணியன், செயற்குழு உறுப்பினா் இளங்கோவன் ஆகியோா் குழுவில் இடம் பெற்றனா்.

சந்திப்பின்போது திருவேட்டக்குடி சிற்பி தனராஜ் தான் வடிவமைத்த அமைச்சா் சந்திர பிரியங்கா உருவ சிற்பத்தை அவரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com