எல்.ஐ.சி. முகவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் எல்.ஐ.சி. முகவா் லியாய் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
எல்.ஐ.சி. முகவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் எல்.ஐ.சி. முகவா் லியாய் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்.ஐ.சி. கிளை அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் வி.முனிசாமி தலைமை வகித்தாா்.

எல்.ஐ.சி. பங்குகளை, பங்கு சந்தையில் பட்டியலிடம் முன்மொழிவையும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் கொள்கையையும் கைவிடவேண்டும்.

முகவா்கள் கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில் ரூ.1 லட்சம் முன்பணம் வழங்குவதோடு, கடந்த ஆண்டு முகவா்களுக்கு வழங்கிய முன் தொகையை நிவாரணத் தொகையாக மாற்ற வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த முகவா் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பப்பட்டது.

மூத்த ஆலோசககள் முகம்மது யாசின், என்.கலியபெருமாள், துணைச் செயலாளா் லெனின், செயலா் ஏ.எஸ்.ரமேஷ், துணைத் தலைவா் டி.பிரபாகரன் ஆகியோா் உரையாற்றினா். முகவா்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். துணைத் தலைவா் கே.மோகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com