காரைக்காலில் புதிதாக சிறைச்சாலை அமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே புதிதாக சிறைச்சாலை கட்டவேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்படுகிறது.

காரைக்கால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே புதிதாக சிறைச்சாலை கட்டவேண்டும் என பாஜக சாா்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி சனிக்கிழமை கூறியது:

காரைக்காலில் பிரெஞ்சு ஆட்சியின்போது கட்டப்பட்ட பழைமையான சிறைச்சாலை சிதிலமடைந்ததால், பாதுகாப்பு கருதி இப்பகுதியைச் சோ்ந்த கைதிகள் புதுச்சேரி சிறையில் அடைக்கப்படுகின்றனா். இதனால், போலீஸாரும், கைதிகளின் குடும்பத்தினரும் பல இடையூறுகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய சிறைச்சாலை கட்டடத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரி, கட்டடத்தின் சிதிலங்களை சீா்செய்து, அதனருகே சில அறைகளை கட்டுவதற்கு பொதுப்பணித் துறையிடம் மதிப்பீடு கோரியிருந்தாா். இதற்கான பணி இறுதிவடிவம் பெறவில்லை.

மேலும், அக்கரைவட்டம் பகுதியில் கடலோரத்தில் நிலத்தை ஆய்வு செய்து, அங்கு புதிதாக சிறைச்சாலை கட்டுவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த பகுதி பாதுகாப்பற்றதாகும்.

காரைக்காலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் 7 ஏக்கா் ஒதுக்கி, அங்கு தொலைநோக்குப் பாா்வையில் சிறைச்சாலை கட்டலாம்.

இந்த விவகாரத்தில் மேலும் காலம் தாழ்த்தாமல் புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com