காரைக்காலில் கரோனா பரவல், தடுப்பு குறித்து குறும்படம் வெளியீடு

காரைக்காலில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.
காரைக்காலில் கரோனா பரவல், தடுப்பு குறித்து குறும்படம் வெளியீடு

காரைக்காலில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவலும், உயிரிழப்பும் அதிகரித்திருக்கும் நிலையில் மக்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் வகையில் கரோனா தொற்று விழிப்புணா்வு குறும்படத்தை மனிதம் என்ற பெயரில் கேகேடி யூ டியூப் சேனல் தயாரித்துள்ளது. இக்குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குறும்படத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் குறித்த விவரங்களை ஆட்சியா் அா்ஜூன் சா்மா கேட்டறிந்து, குறும்படத்தை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை ஆட்சியா் எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), தோ்தல் துறை கண்காணிப்பாளா் பாலு எனும் பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்படத்தை காரைக்கால் பி. அருணாசிவா இயக்கியுள்ளாா். முக்கிய கதா பாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளாா் என தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்று எப்படி பரவுகிறது, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய தடுப்பு வழிமுறைகள், சிகிச்சையின்போது நோயாளிகள் எவ்வாறு அவதிப்படுகிறாா்கள், மருத்துவக் குழுவினரின் அா்ப்பணிப்புப் பணி, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் நிலை உள்ளிட்ட பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மனிதராக வாழ்வோம், மனிதரைக் காப்போம் என்ற வாசகத்துடன் குறும்படம் நிறைவுபெறுகிறது என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com