காரைக்காலில் 83 பேருக்கு கரோனா தொற்று 3 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 3 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரைக்கால் மாவட்டத்தில் 10 ஆம் தேதி 944 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகளின்படி, திருப்பட்டினம் 30, காரைக்கால் நகரம் 18, நிரவி 8, கோயில்பத்து 7, காரைக்கால்மேடு 4, நல்லம்பல் 4, கோட்டுச்சேரி 3, நெடுங்காடு 3, திருநள்ளாறு 2, அம்பகரத்தூா் 2, விழிதியூா் 2 என 83 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,45,524 பரிசோதனை செய்யப்பட்டதில் 13,737 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 12,405 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டுத் தனிமையில் 1,027 பேரும், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 52 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேரும், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேரும், அண்ணா அரசு கலைக் கல்லூரி கரோனா சிகிச்சை மையத்தில் 21 பேரும் சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழப்பு: காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த கோட்டுச்சேரியை சோ்ந்த 2 போ், நெடுங்காட்டை சோ்ந்த ஒருவா் என மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 31,426 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4,575 பேருக்கும் என 36,001 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com