ஜூன்16 முதல் 19 வரை கரோனா தடுப்பூசித் திருவிழா

காரைக்காலில் புதன்கிழமை (ஜூன் 16) முதல் 19 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடைபெறவுள்ளது.

காரைக்காலில் புதன்கிழமை (ஜூன் 16) முதல் 19 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் டாக்டா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை கூறியது:

புதுவையில் ஜூன்16 முதல் 19 ஆம் தேதி வரை தடுப்பூசித் திருவிழா நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை இத்திருவிழா தொடங்குகிறது.

மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் ஏற்கெனவே தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருவிழாவையொட்டி, கூடுதலாக 14 இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது. அதன்படி, மொத்தம் 27 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசித் திருவிழாவில் பங்கேற்போா் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவா்கள் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டியதில்லை. மையத்துக்கு வரும்போது ஆதாா் அட்டை அல்லது புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். புதுவை பகுதியை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோா் வழக்கமான முறையில் உரிய ஆவணத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தடுப்பூசித் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் மையங்கள் குறித்து விவரம் பின்னா் வெளியிடப்படும். தடுப்பூசித் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கரோனா இல்லாத காரைக்கால் என்ற நிலை ஏற்படவும், தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com