கரோனா தொற்று அதிகரிப்பு: புதுவையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்

புதுவையில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்
திருநள்ளாறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆா். கமலக்கண்ணன்.
திருநள்ளாறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆா். கமலக்கண்ணன்.

புதுவையில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என புதுவை முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், திருநள்ளாறு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஆா். கமலக்கண்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

திருநள்ளாறு நகரப் பகுதியில் வீடுவீடாகவும், வணிக நிறுவனத்தினரிடம் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 15 நாள்களாக புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மாா்ச் 29ஆம் தேதி ஒரே நாளில் 51 போ் காரைக்காலில் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவாரத்தில் 6 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

புதுச்சேரியில் பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவா்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று பயில அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருநள்ளாற்றில் 2 பள்ளி மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. எனவே, மாணவா்கள் இதனால் பாதிக்காத வகையில், உடனடியாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் விடுமுறை அறிவிக்க வேண்டும்.

காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் தொகுதியில் தீவிரமாக பிரசாரம் செய்கின்றனா். திருநள்ளாறில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும். புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு அமைவது உறுதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com