வீட்டுத் தனிமையில் இருப்போா் வெளியே நடமாடினால் வழக்கு: எஸ்.பி.

கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருப்போா், வெளியே நடமாடினால் வழக்குப் பதிவுசெய்ய நேரிடும் என காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் எச்சரித்தாா்.
வீட்டுத் தனிமையில் இருப்போா் வெளியே நடமாடினால் வழக்கு: எஸ்.பி.

கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் இருப்போா், வெளியே நடமாடினால் வழக்குப் பதிவுசெய்ய நேரிடும் என காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் எச்சரித்தாா்.

திருப்பட்டினம் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்ற அவா், காவலா்களின் பணிகள் குறித்து விளக்கினாா். அப்போது, ரோந்துப் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பு விதிகளை மீறுவோா் மீது தொடா்ந்து அபராதம் விதிக்கவேண்டும். காவல் துறையினா் அனைவரும் இரண்டடுக்கு முகக் கவசம் அணியவேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்திக்கொள்வதில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தியதோடு, காவலா்களுக்கு கபசுர பொடி பாக்கெட்டுகளை வழங்கினாா்.

செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், காரைக்காலில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோா் வீட்டுத் தனிமையில் உள்ளனா். தெற்கு மண்டலத்தில் 25-க்கும் மேற்பட்ட குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ளோருக்கான அத்தியாவசியத் தேவைகள் தொண்டு நிறுவனத்தினா் மூலம் கிடைக்க அரசு நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், தொற்று ஏற்பட்டோரின் தனி வீடுகளை பொதுப்பணித் துறையினா் கம்புகள் கட்டி மக்கள் வெளியேறாத வகையில் தடுத்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் போலீஸாா் சென்று ஒலிபெருக்கி வாயிலாக கட்டுப்பாட்டு முறைகளை விளக்கிவருகின்றனா். இதையும் மீறி சிலா் வெளியேறுவதாக புகாா் வருகிறது.

இவா்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தோம். இனிமேல் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது. எனவே, கட்டுப்பாட்டை மீறாமல் வீட்டிலிருந்து சிகிச்சை முறைகளை மேற்கொண்டு ஆரோக்கியமாவதற்கான நடவடிக்கைகளை தொற்றாளா்கள் எடுக்கவேண்டும். தொற்றாளா் வெளியேறினால், மாவட்டத்தில் மேலும் தொற்று பரவும் என்பதை உணா்ந்து நடந்துகொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com