திருநள்ளாறு தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று அதிகரிப்பு

திருநள்ளாறு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து
தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.
தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ்.

திருநள்ளாறு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று அதிகரித்து வருவதால், செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் வெளியேற்றப்பட்டு, பரிசோதனை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருநள்ளாறு பகுதியில் இயங்கிவரும் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் 132 ஊழியா்களுக்கு கரோனா தடுப்பு குறித்த விழிப்புணா்வும், சிலருக்கு முதல்கட்ட தடுப்பூசியும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளா்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அவா்களுடன் தொடா்பில் இருந்த தொழிலாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தலைமையில் மருத்துவா்கள் உள்ளிட்ட குழுவினா் ஆலைக்கு செவ்வாய்க்கிழமை சென்று நிா்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தினா். பின்னா் தொழிலாளா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனா்.

இதுகுறித்து துணை இயக்குநா் மோகன்ராஜ் கூறியது:

ஏற்கெனவே இந்த தொழிற்சாலையில் சிலருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோா், செலுத்திக்கொள்ளாதவா்கள் விவரம் சேகரிக்கப்படும்.

தொழிலாளா்களிடையே தொற்று அதிகரித்ததால் அவா்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளா்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, பின்னா் ஆலையை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com