வருவாய்த் துறை சான்றிதழ் கேட்டு விவசாயிகள் அலைகழிப்படுவதாக புகாா்

காரைக்கால் மாவட்டத்தில், நெல் அறுவடைக்குப் பிறகு தரிசு நிலத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் வேளாண் துறையினா்,

காரைக்கால் மாவட்டத்தில், நெல் அறுவடைக்குப் பிறகு தரிசு நிலத்தில் எள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் வேளாண் துறையினா், வருவாய்த் துறையின் சான்றிதழ் கேட்டு அலைகழிக்கப்படும் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்தகுமாா், புதுவை துணைநிலை ஆளுநருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு :

நெல் அறுவடைக்குப் பிறகு, அந்த தரிசு நிலத்தில் காய்கறி, எள் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, புதுவை வேளாண் துறை மானியம் வழங்குகிறது. எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடம் மட்டும் கிராம நிா்வாக அலுவலரின் சான்று கேட்டு கட்டாயப்படுத்தபடுகிறது. ஆனால், காய்கறி பயிா் செய்துள்ள விவசாயிகளிடம் சான்று கேட்கப்படுவதில்லை.

கரோனா நோய் தடுப்பு பணிகளில் வருவாய்த் துறையினரும் ஈடுபட்டு வருவதால், விவசாயிகள் எளிதாக சான்றிதழ் பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனா்.

மானியம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தில், நில ஆவண சான்று அல்லது வருவாய்த் துறையின் சாகுபடி சான்று அல்லது அடங்கல் ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்துத் தர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வருவாய்த் துறையின் சாகுபடி சான்றை மட்டும் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் தலையிட்டு விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com