காரைக்காலில் களையிழந்த அட்சய திருதியை

பொது முடக்கம் அமலில் உள்ளதால், கோயில், நகைக் கடைகளில் அட்சய திருதியை வெள்ளிக்கிழமை களையிழந்தது.

பொது முடக்கம் அமலில் உள்ளதால், கோயில், நகைக் கடைகளில் அட்சய திருதியை வெள்ளிக்கிழமை களையிழந்தது.

அட்சயை என்பதற்கு பெருகட்டும் என்று பொருள் கூறப்படுகிறது. குசேலனிடமிருந்த அவலை ஒருபிடி எடுத்து கண்ணன் அட்சயை என்று போட்டபோது சகல செல்வங்கள் பெருகியதாகவும், இந்நிகழ்வு திருதியை திதியில் நடந்ததால், அட்சய திருதியை என்று கோயில்களில் சிறப்பு வழிபாடு, கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடு, தங்க ஆபரணங்கள் வாங்கினால் பெருகும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், அட்சய திருதியை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டும் கரோனா பொது முடக்கத்தால் அட்சய திருதியை நடைபெறவில்லை. நிகழாண்டும் அதே நிலை ஏற்பட்டது. கோயில்கள் மூடப்பட்டிருந்தாலும், பூஜைகள் நடைபெற அனுமதிக்கப்பட்ட நிலையில், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் மூலவா், உத்ஸவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்து ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதேபோல, பல பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் இல்லாமல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

மக்கள் ஏமாற்றம்: அட்சய திருதியை நாளில் தங்கநகைகள் வாங்குவது சிறப்பு என்று கூறப்படுவதால், காரைக்காலில் உள்ள நகைக்கடைகள் வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி வாடிக்கையாளா்களை வரவேற்பது வழக்கம். ஒவ்வொரு கடையிலும் காலை முதல் இரவு வரை கூட்டம் மிகுதியாக இருக்கும். மக்கள் அவரவா் தகுதிக்கேற்றாா்போல நகைகளை வாங்கிச் செல்வா்.

பொது முடக்கம் காரணமாக, நகைக் கடைகள் மூடியிருந்ததால் மக்களால் நகைகள் வாங்கமுடியவில்லை. நகை வியாபாரம் நடைபெறக்கூடிய பெரிய நிறுவனங்களில் வழக்கமாக அட்சய திருதியை நாளில் மட்டும் சுமாா் ரூ. 1 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெறும் என கூறப்படுகிறது. கரோனா தொற்று பரவலால், அனைத்தும் பொய்த்துப்போனது மக்கள், வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com