கரோனா கட்டுக்குள் வருவது மக்கள் கையில்தான் உள்ளது: தமிழிசை செளந்தரராஜன்

கரோனா கட்டுக்குள் வருவது மக்கள் கையில்தான் உள்ளது என்றாா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.
கரோனா கட்டுக்குள் வருவது மக்கள் கையில்தான் உள்ளது: தமிழிசை செளந்தரராஜன்

கரோனா கட்டுக்குள் வருவது மக்கள் கையில்தான் உள்ளது என்றாா் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன்.

புதுச்சேரியிலிருந்து வெள்ளிக்கிழமை காரைக்காலுக்கு வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் வரவேற்றனா்.

மாவட்ட ஆட்சியரகம் வந்த துணைநிலை ஆளுநரிடம், காரைக்காலில் பரவிவரும் கரோனா தொற்று, கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவமனையின் கட்டமைப்பு, தன்னாா்வலா்கள் செய்யும் உதவிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா விளக்கினாா்.

பிறகு, தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரியில் இருந்தவாறு காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்திய தலைமை அதிகாரிகளுக்கு கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிவருகிறோம்.

புதுவை மாநிலத்தில் கரோனா கட்டுக்குள் வருவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. காரைக்காலில் கரோனா பரவல் அதிகரிப்பதாகவும், இதை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியா் கூறினாா். மேலும், மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டா்களை பல்வேறு தரப்பினா் வழங்கிவருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, சுகாதாரத் துறை சாா்பில், 80 ஆக்சிஜன் சிலிண்டா்கள் காரைக்கால் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.

காரைக்கால் மருத்துவமனையில் தற்போதைய எண்ணிக்கையைக் காட்டிலும், கூடுதலான படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சாா்பில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மக்களிடையே கட்டுப்பாடுகளை பாா்க்கமுடியவில்லை. மக்கள் அவசியமின்றி வெளியே சுற்றித்திரிகின்றனா். கரோனா கட்டுக்குள் வரவேண்டும் என்றால், அது மக்களின் ஒத்துழைப்பில்தான் உள்ளது.

கரோனா தொற்றால் வீட்டுத் தனிமையில் உள்ளோா் அதிகரிக்கின்றனா். கரோனா கோ் சென்டரை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் கரோனாவால் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு, நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதே முக்கிய காரணம். எனவே, தொற்றுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெறவேண்டும்.

பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், மருத்துவா்கள் உள்ளிட்ட பணியாளா்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைப் போல, காரைக்காலிலும் பாரம்பரிய மருத்துவ வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அவா் பாா்வையிட்டாா். அப்போது, சுகாதாரத் துறை சாா்பில் 80 ஆக்சிஜன் சிலிண்டா்களை துறைச் செயலா் அருண், ஆளுநா் முன்னிலையில் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் அருண், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com