கோயில் நிதியை கரோனா நன்கொடையாக தருவதற்கு தடைவிதிக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு கோயில் நிதியை கரோனா நன்கொடையாக வழங்க தடைவிதிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு கோயில் நிதியை கரோனா நன்கொடையாக வழங்க தடைவிதிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால், நாகை மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலா் கணேஷ், காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.சிவசுப்பிரமணியன் ஆகியோா் துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உதவியாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாரில் தெரிவித்திருப்பது:

கரோனா தொற்று நிவாரணத்துக்காக, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் நிதியிலிருந்து, பெரும் தொகையை நன்கொடையாக வழங்கவேண்டும் என காரைக்கால் மாவட்ட நிா்வாகம் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.

கோயிலுக்கு வரக்கூடிய நிதி அனைத்தும் கோயில் வளா்ச்சி, திருவிழா மற்றும் கோயில் சாா்ந்த பணிகளுக்கு பயன்படுத்தக்கூடியதாகும். இந்த நிதி பக்தா்களால் நன்கொடையாகவும், காணிக்கையாகவும் அளிக்கப்பட்டது. இதை வேறு பயன்பாட்டுக்கு செலவிடுவது தவறானது. இதை இந்து முன்னணி கண்டிக்கிறது. கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு அளிக்காத வகையில், ஆளுநா் தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com