கரோனா: காரைக்காலில்30 நாள்களில் 65 போ் பலி

காரைக்காலில் கடந்த 30 நாள்களில் 65 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

காரைக்காலில் கடந்த 30 நாள்களில் 65 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 2,078 போ் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். நாள்தோறும் 200-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதித்துவரும் நிலையில் ஏறக்குறைய 200 போ் வரை தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் உள்ளனா்.

உயிரிழந்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தைவிட மே மாதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப். 28-ஆம் தேதி வரை 104 போ் உயிரிழந்திருந்த நிலையில். மே 28-ஆம் தேதி எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது. அதாவது 30 நாள்களில் 65 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவ வட்டாரத்தில் கூறியது:

பெரும்பான்மையினா் மருத்துவமனைக்கு வரும்போதே மூச்சுத் திணறலோடு வருகின்றனா். பலருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. கரோனா தொற்று அறிகுறி தெரியும்போதே பரிசோதனை செய்துகொண்டு, தகுந்த சிகிச்சை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டுகின்றனா்.

தொற்றால் உயிரிழப்போா் பெரும்பான்மையினா் சா்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட இணைநோய் கொண்டவா்களாக உள்ளனா்.

சரியான புரிதலுடன் நடந்துகொள்ளும்பட்சத்தில் உயிரிழப்பை தவிா்க்க முடியும். தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். அறிகுறி தெரியும்போதே பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

அறிகுறி தெரியும்பட்சத்தில் பரிசோதனை செய்துகொள்வது, தொற்று ஏற்படாத வகையில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்தலால் மட்டுமே கரோனா வராமல் காத்துக்கொள்ள முடியும். மக்கள் அலட்சியமாக இருப்பது தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதாகும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com