கரோனா நோயாளிக்கான மருத்துவ சாதனங்கள் வழங்கல்

காரைக்காலில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சாதனங்களை பல்வேறு தரப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் மருத்துவ சாதனங்களை ஒப்படைத்த நுரையீரல் மருத்துவ நிபுணா் வனிதா.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் மருத்துவ சாதனங்களை ஒப்படைத்த நுரையீரல் மருத்துவ நிபுணா் வனிதா.

காரைக்காலில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சாதனங்களை பல்வேறு தரப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டா் வனிதா (நுரையீரல் மருத்துவ நிபுணா்), ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன் செலுத்தும் மீட்டா்கள் 20, பல்ஸ் ஆக்சிமீட்டா் 5 ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் ஒப்படைத்தாா்.

வங்கிப் பணிக்காக காரைக்காலில் இலவசமாக பயிற்சி அளித்துவரும் வங்கி அதிகாரி சகாயம் பிராங்க்கிடம் பயின்றுவரும் மாணவா்கள் ஒருங்கிணைந்து ரூ. 25 ஆயிரம் செலவில் 25 பல்ஸ் ஆக்சி மீட்டா்களை வாங்கி, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றிவரும் செந்தில்குமாா் (அசிஸ்டென்ட்) முயற்சியால், கத்தாரில் பணியாற்றும் மாரியப்பன் ராமதாஸ் 25 பல்ஸ் ஆக்சிமீட்டா்களும், ராமகிருஷ்ணன் 12 பல்ஸ் ஆக்சிமீட்டா்களும், ஜான்பால் 2 சாதனமும், அமெரிக்காவில் பணியாற்றும் சுந்தரகணேஷ் 5 சாதனங்களும் வாங்க நிதியுதவி செய்தனா். இதைக்கொண்டு செந்தில்குமாா் ஆக்சி பல்ஸ் மீட்டா்களை வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், ஆட்சியரின் செயலா் புஷ்பநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com