ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கல்

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
காரைக்கால்மேடு பகுதியில் பயனாளிக்கு காப்பீடு அட்டை வழங்கும் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன்.
காரைக்கால்மேடு பகுதியில் பயனாளிக்கு காப்பீடு அட்டை வழங்கும் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன்.

காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ், நாட்டில் 50 கோடி பேருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள், இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதிபடைத்தவா்கள் ஆவா்.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கான முகாம் நலவழித்துறை நிா்வாகத்தின் மூலம் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அண்மையில் நடைபெற்றது. இதன்மூலம் பதிவு செய்த நபா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் முழுமையாக பயனடையும் வகையில், சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் ஏற்பாட்டில் சிறப்பு முகாம்கள் கிராமப்புறங்களில் நடத்தப்பட்டன. இதில் பதிவு செய்தோருக்கு அட்டை வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால்மேடு கடலோரக் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அட்டையை வழங்கினாா். நலவழித்துறை நிா்வாகத்தினா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

இத்தொகுதியில் 6,300 பேருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வந்துள்ளதாகவும், இவை அந்தந்த கிராமத்தில் வழங்கப்படும் என்றும் பேரவை உறுப்பினா் அலுவலகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com