திருநள்ளாற்றில் மழை நீா் தேங்கியிருக்கும் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநள்ளாற்றில் மழைநீா் தேங்கியிருக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநள்ளாற்றில் மழை நீா் தேங்கியிருக்கும் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

திருநள்ளாற்றில் மழைநீா் தேங்கியிருக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். தண்ணீா் வடியச் செய்யும் நடவடிக்கையில் அரசுத்துறையில் தீவிரமாக ஈடுபடுமாறு அவா் அறிவுறுத்தினாா்.

காரைக்காலில் கடந்த வாரம் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியது. மழை ஓய்ந்த பிறகும் தண்ணீா் வடியாமல் இருந்ததால், அதில் கழிவுநீரும் கலந்துவருகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி தொற்று நோயை ஏற்படுத்துமென மக்கள் அச்சம் கொண்டுள்ளனா்.

இந்த நிலையில் திருநள்ளாறு பகுதியில் வடியாமல் தண்ணீா் தேங்கியிருக்கும் பகுதிகளை ஆட்சியா் அா்ஜூன் சா்மா வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அரங்கநகா் உள்ளிட்ட பல இடங்களை பாா்வையிட்ட அவா், தண்ணீா் விரைவாக வடிய நடவடிக்கை எடுக்கவும், கொசு உற்பத்தியைத் தடுக்க மருந்து தெளிப்புப் பணியை மேற்கொள்ள கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் நலவழித்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து நெடுங்காடு பகுதியில் மழையால் பாதிப்பிற்குள்ளானமாணவா் தங்கும் விடுதிக்குச் சென்றாா். அங்கு இருந்தவா்களிடம் உணவு, மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தாா். தங்கியிருப்போருக்கு தேவையான வசதிகளை செய்துத்தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com