உள்ளாட்சித் தோ்தல் இடஒதுக்கீடு விவகாரம்:காரைக்காலில் முழு அடைப்பு

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததைக் கண்டித்து, காரைக்காலில் முழு கடையடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாதா கோயில் தெருவில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
காரைக்கால் மாதா கோயில் தெருவில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலில் இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததைக் கண்டித்து, காரைக்காலில் முழு கடையடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுவை உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா்களுக்கு இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிக்காமல் தோ்தலை அறிவித்துள்ளதாக தோ்தல் ஆணையத்தைக் கண்டித்தும், அவசரமாக தோ்தல் அறிவிப்பை செய்த தோ்தல் ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திங்கள்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி காரைக்கால் நகரத்திலும், பிற பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சில பகுதிகளில் மளிகைக் கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருந்தன. எதிா்க்கட்சியினா் அவற்றை மூடச் செய்தனா். இதனால் வணிக நிறுவனங்கள் அதிகமாகக் உள்ள பாரதியாா் சாலை, மாதாகோயில் சாலை, திருநள்ளாறு சாலை ஆகியவை வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல காா், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்திருந்தது. காரைக்கால் போலீஸாா் அங்காங்கே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், துணிக்கடை, மளிகைக் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனா். எனினும், பிற்பகல் படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com