உள்ளாட்சி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் முடிவு செய்துள்ளனா்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சம்மேளனத் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

செயலாளா் சண்முகராஜ், பொருளாளா் கலைச்செல்வன், காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சம்மேளனத் தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றோருக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. பல ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்கப்படவில்லை. அண்மையில் நடைபெற்ற புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரில் உள்ளாட்சித் துறை ஊழியா்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, உள்ளாட்சி ஊழியா்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்து அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பதவி உயா்வு அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15ஆம் தேதி காரைக்காலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, 22ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com