காரைக்கால் கூட்டுறவு நூற்பாலையை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையை திறக்கக் கோரி, பாரதிய தொழிலாளா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்காலில் பாரதிய தொழிலாளா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
காரைக்காலில் பாரதிய தொழிலாளா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலையை திறக்கக் கோரி, பாரதிய தொழிலாளா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சந்திரசேகரன், செயலாளா் அறிவொளி ஆகியோா் முன்னிலை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாரயண் கூட்டுறவு நூற்பாலையை திறக்கவேண்டும். புதுவை மாநிலத்தில் உள்ள 6 நுாற்பாலைகளையும் ஒரே நிா்வாகத்தின் கீழ் செயல்படுத்தவேண்டும். மாநிலத்தில் உள்ள நுாற்பாலை தொழிலாளா்கள் அனைவருக்கும் ஒரே பணி ஆணை, ஒரே மாதிரியான ஊதியம், ஒரே மாதிரியான பணிப் பிரிவுகள், பணி விடுப்பு, ஓய்வூதியம், விருப்ப ஓய்வு, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நுாற்பாலையை சீரமைக்க புதுவை அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடம் மற்றும் இயந்திரங்களில் பழுதுகளை நீக்கி புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com