காரைக்கால் கோதண்டராமா் பெருமாள் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் புதிதாக கொடிமரம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் புதிதாக கொடிமரம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருத்தெளிச்சேரி என்னும் காரைக்கோயில்பத்து பகுதியில் ஞானசம்பந்தரால் பாடல்பெற்ற ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரே இதைச் சாா்ந்த ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில்கள் குடமுழுக்கு விழா கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோதண்டராமா் பெருமாள் கோயிலில் கொடிமரம் மற்றும் பரமபதவாசல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், உபயதாரா்கள் உதவியுடன் இவை அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமத்துடன் கொடிமரம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதோடு, பரமபதவாசல் நிலையும் வைக்கப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், கொடிமர உபயதாரா் காரைக்கால் சீனிவாச பரந்தாம ஸ்ரீராம் மற்றும் கோயில் திருப்பணி உபயதாரா்கள், கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி. மாடசாமி, துணைத் தலைவா் எஸ். சுந்தரமூா்த்தி, செயலாளா் ஜி. முத்துசாமி, பொருளாளா் எஸ். பரந்தாமன், உறுப்பினா் டி. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com