இந்து முன்னணி நிறுவனா் ராம.கோபாலன் பிறந்த நாள்

இந்து முன்னணி நிறுவனா் மறைந்த ராம. கோபாலன் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்கால்: இந்து முன்னணி நிறுவனா் மறைந்த ராம. கோபாலன் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ராம.கோபாலனின் 95-ஆவது பிறந்த நாள் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில் நடத்தப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு, இந்து முன்னணி தமிழ் மாநில செயற்குழு உறுப்பினா் கே.எஸ். விஜயன், காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ.துரைசேனாதிபதி, இந்து முன்னணி மாவட்ட செயலாளா் என். சிவசுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளா்கள் கே.ஜெய்சங்கா், ஆா்.சிவகுமாா், கே.மணிகண்டன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா்கள் மணிகண்டன், செந்தில் அதிபன், அறிவுக்கரசு, செந்தில் காா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com