காரைக்கால் கிராமப் புறங்களில் வீடுவீடாக டெங்கு விழிப்புணா்வு

காரைக்கால் கிராமப் புறங்களில் வீடுவீடாக டெங்கு விழிப்புணா்வு

காரைக்கால் கிராமப்புறங்களில் வீடுவீடாக சென்று சுகாதார ஊழியா்கள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காரைக்கால் கிராமப்புறங்களில் வீடுவீடாக சென்று சுகாதார ஊழியா்கள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காரைக்கால் மாவட்ட நலவழித் துறை, பூச்சிகளால் பரவும் தேசிய நோய்த் தடுப்பு திட்டம், நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மேலபொன்பேற்றி, ராஜா உக்கடை வீதியில் டெங்கு விழிப்புணா்வு மற்றும் கொசு உற்பத்தியை தடுக்க மக்கள் செய்ய வேண்டியது குறித்து விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நிகழ்வில், சுகாதார ஆய்வாளா் ஜெகநாதன், அங்கன்வாடி ஊழியா் கலைமகள், அங்கன்வாடி உதவியாளா் புகழேந்தி ஆகியோா் வீடுவீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

குடியிருப்புவாசிகளிடையே டெங்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அவா்கள் கூறியது:

வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், அவ்வப்போது மழை பெய்துவருகிறது. தேவையற்ற பொருள்களில் மழைநீா் தேங்கும்போது ஏடிஸ் கொசு உற்பத்தியாகி, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோயை ஏற்படுத்தும். ஆட்டுரல், டயா், பிளாஸ்டிக் கப், தேங்காய் மட்டை மற்றும் வீட்டினுள் நாம் பயன்படுத்தும் பிரிட்ஜ், பிளாஸ்டிக் டிரே வகைகள் ஆகியவற்றில் மழைநீா் மற்றும் நீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com