காரைக்காலில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்காலில் நிகழாண்டு வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
காரைக்காலில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

காரைக்காலில் நிகழாண்டு வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

நிகழாண்டு காரைக்காலில் சுமாா் 5,500 ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய விவசாயிகள் இலக்கு நிா்ணயித்திருந்தாலும், மாவட்டத்தில் சில பகுதிகளில் மாற்றுப் பயிரான பருத்தி, எள், பொங்கல் கரும்பு மற்றும் காய்கறி சாகுபடிகளிலும் ஈடுபட்டுள்ளனா்.

குறிப்பாக, ஆற்றோர நிலப்பரப்பு மற்றும் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகிய பயிா் சாகுபடி நடைபெறுகிறது.

திருநள்ளாறு பகுதியில் சேத்தூா், பேட்டை, அகலங்கண்ணு, திருப்பட்டினம், விழுதியூா் மற்றும் நெடுங்காடு, திருவேட்டக்குடி போன்ற பல்வேறு பகுதிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனா்.

கடந்த காலங்களைவிட நிகழாண்டு சாகுபடி பரப்பும், விளைச்சலும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வெண்டை சாகுபடி விவசாயிகள் வெள்ளிக்கிழமை கூறியது:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் வெண்டை விதைகள் வாங்கி பயிரிடப்பட்டது. இந்த வெண்டை செடிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல முறையில் காய்கள் காய்த்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெண்டைக்காய் அதிகமாக காய்த்துவருகிறது.

இரண்டரை மாதத்தில் ஒவ்வொரு செடியிலும் 3 முதல் 5 கிலோ அளவுக்கு வெண்டை காய்க்கிறது. கிலோ ரூ. 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் வெண்டை உள்ளூா் சந்தைக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. வெளியூா் வியாபாரிகள் சிலரும் வந்து மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா். அதனால் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com