காரைக்காலில் புதுவை கலை விழா

காரைக்காலில் பல்வேறு மாநில கலைஞா்கள் பங்கேற்ற கலை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
காரைக்காலில் புதுவை கலை விழா

காரைக்காலில் பல்வேறு மாநில கலைஞா்கள் பங்கேற்ற கலை விழா 2 நாள்கள் நடைபெற்றது.

புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு நடுவம், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து கடற்கரைத் திடல், நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோயில் திடல் ஆகிய இரண்டு இடங்களில் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை 6 முதல் இரவு 9 மணி வரை புதுவை கலை விழாவை நடத்தியது.

கடற்கரையில் விழாவை திங்கள்கிழமை புதுவை போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தாா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன், மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ் மற்றும் காரைக்கால் உதவி நூலக தகவல் அதிகாரி திருமேனிசெல்வம் மற்றும் தென்னக பண்பாட்டு நடுவத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

குஜராத், உத்தரகண்ட், ராஜஸ்தான், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில கலைக்குழுவினா், உள்ளூா் கலைக்குழுவினா் பங்கேற்றனா்.

அந்தந்த மாநில கலாசாரத்தின்படி நடனம், இசை நிகழ்ச்சிகளை நடத்தினா். உள்ளூா் கலைஞா்கள் வீணை, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம் உள்ளிட்டவற்றை நடத்தினா். விடுமுறை தினத்தில் கடற்கரைக்கு வந்த திரளான மக்களும், கலை விழாவை காணும் வகையிலும் என ஏராளமானோா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com