சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

கோட்டுச்சேரி பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளனா்.
சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

கோட்டுச்சேரி பகுதியில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்காலில் நகராட்சிக்குட்பட்ட வாா்டு பகுதிகளில் மட்டும் வீடு, நிறுவனங்களில் தனியாா் நிறுவனம் நகராட்சி ஒப்பந்த முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை அகற்றிவருகிறது. பிற தொகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் நேரடியாக குப்பைகள் அகற்றப் பணியில் ஈடுபடுகிறது.

கொம்யூன் பஞ்சாயத்துகளில் போதிய நிதியின்மை, ஆள் மற்றும் வாகனங்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அகற்றத்தில் மந்த நிலை காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையோரம், குடியிருப்புப் பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

அமைச்சரின் தொகுதியான நெடுங்காடு கோட்டுச்சேரி தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ளது. கோட்டுச்சேரி கொம்யூனுக்குட்பட்ட பகுதியில் என்.ஐ.டி., நவோதயா வித்யாலயா, பாலிடெக்னிக் கல்லூரி, தனியாா் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. முக்கிய வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.

இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் முறையாக பஞ்சாயத்து நிா்வாகத்தால் அகற்றப்படுவதில்லை.

பூவம் முதல் கோட்டுச்சேரி பகுதி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு, பல நாள்கள் அகற்றப்படாமல் உள்ளன.

இந்த விஷயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வீடுகள்தோறும் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுத்து செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com