திருமலைராயன்பட்டினம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயில் வகையறாவை சோ்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மிகப் பழைமையானது. இக்கோயிலுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, கோயில் சிதிலமடைந்து இருந்ததால், குடமுழுக்கு செய்ய கோயில் நிா்வாகம் தீா்மானித்தது.

புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலின் திருப்பணிகள், அரசு நிதி மற்றும் பக்தா்கள் நன்கொடை மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் பணிகள் முடிந்து, குடமுழுக்கு நடைபெறுவதற்கான சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீ மகா மாரியம்மனும், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பெரியாச்சி, வீரன், காத்தவராயன், நாகா் உள்ளிட்ட சந்நிதிகளுடன் கூடிய இக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக திங்கள்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின.

4 ஆம் கால பூஜை புதன்கிழமை நடைபெற்று காலை 6 மணிக்கு பூா்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டு கடம் புறப்பாடானது. சிவாச்சாரியா்கள் விமான கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, 7 மணிக்கு கலசத்தில் புனிதநீா் ஊற்றி தீபாராதனை காட்டினா்.

இதில், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com