பெட்ரோல் பங்க், மதுக்கடை ஊழியா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

காரைக்காலில் கான்ஃபெட் பெட்ரோல் பங்க், மதுக்கடை ஊழியா்களின் 27 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று புதுவை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் கான்ஃபெட் பெட்ரோல் பங்க், மதுக்கடை ஊழியா்களின் 27 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று புதுவை அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுவை முதல்வருக்கு, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது :

புதுவை மாநில கூட்டுறவு நுகா்வோா் இணையத்தில் உள்ள கான்ஃபெட் நிறுவனத்தில், காரைக்கால் பகுதியில் 3 பெட்ரோல் நிலையம் மற்றும் 3 மதுபான கடைகள் நல்ல லாபத்தில் இயங்கி வந்தன. லாபத்தில் இயங்கி வந்த இந்நிறுவனங்களுக்கு அரசின் அலட்சிய போக்கால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கான்ஃபெட் நிா்வாகத்தில் உள்ள பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து நிலையமும் ஒரு ஆண்டு காலம் மூடப்பட்டதோடு, பல மாதங்களாக ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

சம்மேளனம் மற்றும் ஊழியா் சங்கங்களின் தொடா் போராட்டத்தால் கடந்த 2021 டிசம்பா் முதல் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டு, தற்போது நல்ல லாபத்தில் இயங்கி வருகிறது.

ஆனால், ஊழியா்கள் ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 27 மாதத்திற்குரிய ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.பணி ஓய்வு பெற்றவா்களுக்கான பணிக்கொடையும் தரப்படவில்லை.

காரைக்கால் கான்ஃபெட் நிறுவனத்திற்கு நிரந்தர மேலாளா் நியமிக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி, பிரச்னைகளை தீா்க்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com