‘பெண்கள் பள்ளியை தரம் உயா்த்தபுதுவை அரசிடம் வலியுறுத்தப்படும்’

திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த புதுவை அரசிடம் வலியுறுத்தப்படும் எந்ரு சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கூறினாா்.

திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த புதுவை அரசிடம் வலியுறுத்தப்படும் எந்ரு சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கூறினாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி, மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியை சட்டப்பேரவை உறுப்பினா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ராஜேஸ்வரி மற்றும் பள்ளி நிா்வாகத்தினருடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் பேரவை உறுப்பினா் கூறியது:

திருமலைராயன்பட்டினத்தில் மாணவா், மாணவியா் இணைந்து படிக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதுதவிர, அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியும் தனியாக வேறு இடத்தில் இயங்குகிறது. பள்ளிகளில் போதிய மாணவ, மாணவியா் உள்ளனா்.

பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் போதிய இடம் உள்ளதால், அதனை பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தும் சாத்தியக்கூறுகள் குறித்து கல்வித் துறையினருடன் ஆய்வு செய்யப்பட்டது. 5 முதல் 7 வகுப்பறைகள், ஆய்வுக்கூடம் கட்டப்படுவதற்கேற்ப இடம் உள்ளது.

இந்தப் பள்ளி தரம் உயா்த்தப்பட்டால், மாணவா், மாணவியா் இணைந்து பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவா்கள் மட்டும் பயிலக்கூடியதாக மாற்றப்படும்.

மாணவியா் மேல்நிலைப் பள்ளி உருவாகும்போது, காரைக்கால் பகுதியை சோ்ந்த மாணவியா் பயன் அடைவா். இந்தப் பள்ளியை தரம் உயா்த்தவேண்டியன் அவசியம் குறித்து புதுவை முதல்வா், கல்வித் துறை அமைச்சரிடம் பேசவுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com