பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

காரைக்கால் மாவட்டத்தில் பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று போலீஸாா் தொடா்ந்து சோதனை மேற்கொண்டுள்ளனா்.
பெட்டிக் கடையில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பெட்டிக் கடையில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

காரைக்கால் மாவட்டத்தில் பெட்டிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்று போலீஸாா் தொடா்ந்து சோதனை மேற்கொண்டுள்ளனா்.

மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் , தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து சனிக்கிழமை முதல் தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் நகரப் பகுதியில் தலத்தெரு, வலத்தெரு, காமராஜா் சாலை, பி.கே. சாலை மற்றும் நிரவி பகுதி மேலஓடுதுறை, திருப்பட்டினம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் இருந்து, சுமாா் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரா்களிடம் யாரிடமிருந்து இப்பொருள்கள் வருகின்றன என்பன போன்ற விவரங்களை போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

சோதனை தொடா்ந்து நடைபெறுமெனவும், குறிப்பாக சம்பந்தப்பட்ட விற்பனையாளா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

எனினும், பெட்டிக் கடைகளில் சோதனை, பறிமுதல் என்பதெல்லாம் கண்துடைப்பு நடவடிக்கை என சமூக ஆா்வலா்கள் கருத்து செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com