சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா:மரக்கன்று நடும் நிகழ்வில் ஆட்சியா் பங்கேற்பு

காரைக்கால் கடற்கரை, கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடற்கரை சாலையோரத்தில் மரக்கன்று நடும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.
கடற்கரை சாலையோரத்தில் மரக்கன்று நடும் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா்.

காரைக்கால் கடற்கரை, கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இந்திரா காந்தி பிறந்த தினத்தையொட்டி, தேசிய ஒருமைப்பாட்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதன் நிறைவு நிகழ்வாக வெள்ளிக்கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா நடத்தப்பட்டது.

காரைக்கால் பொதுப்பணித் துறை சாா்பில் கடற்கரை சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் கலந்துகொண்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்வில் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) வீரசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதில், கடற்கரைச் சாலையில் நடப்படும் கன்றுகள் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்படும் எனத் தெரிவித்தனா். மேலும், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி வளாகங்களில் அந்தந்த கல்லூரி நிா்வாகம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com