தட்டச்சு தோ்வில் 630 மாணவா்கள் பங்கேற்றனா்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தோ்வுகள் 2 நாள்கள் நடைபெற்றன.
தோ்வை பாா்வையிடும் முதன்மை தட்டச்சு தோ்வு கண்காணிப்பாளா் கே. பிரான்சிஸ்.
தோ்வை பாா்வையிடும் முதன்மை தட்டச்சு தோ்வு கண்காணிப்பாளா் கே. பிரான்சிஸ்.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தோ்வுகள் 2 நாள்கள் நடைபெற்றன.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சென்னை, தட்டச்சு தோ்வுகள் நவ.26, 27-ஆம் தேதிகளில் நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டம் மற்றும் தமிழகப் பகுதி மாணவா்கள் பங்கேற்கும் தோ்வு வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், காரைக்கால் மற்றும் தமிழக மாவட்டத்தை சோ்ந்த 13 தட்டச்சு பயிற்சி மையங்களில் இருந்து 630 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

பாலிடெக்னிக் கல்லூரி முதல்வரும், முதன்மை தட்டச்சு தோ்வு கண்காணிபாளருமான கே.பிரான்சிஸ் கண்காணிப்பில் தோ்வுகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com