கேந்திரிய வித்யாலயா பள்ளி கட்டுமானப் பணி: நில சீரமைப்பை விரைவுபடுத்த வலியுறுத்தல்

கேந்திரிய வித்யாலயா பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நில சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியரை பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஆட்சியா் எல். முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாஜகவினா்.
ஆட்சியா் எல். முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளிக்கும் பாஜகவினா்.

காரைக்கால்: கேந்திரிய வித்யாலயா பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நில சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சியரை பாஜக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை, மாவட்ட பாஜக தலைவா் ஜெ.துரைசேனாதிபதி தலைமையில், துணைத் தலைவா் சண்முகம், தெற்குத் தொகுதி தலைவா் விஜயபாஸ்கா், அலுவலக செயலா் காா்த்திக் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனு:

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து, காரைக்கால் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக் கட்டடம் கட்டுமானத்துக்காக தோ்வு செய்யப்பட்ட நிலத்தை மணல் கொட்டி சமன்படுத்த ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளாா்.

இந்த தொகை ஒதுக்கீடு செய்து ஏறக்குறைய 6 மாதங்களாகியும், பொதுப்பணித் துறையில் சில அதிகாரிகளின் அலட்சியத்தால், நிலத்தை சமன் செய்வதற்கான பணிகள் நடைபெறவில்லை.

இதற்கான கோப்புகள் எங்கு முடங்கியிருக்கிறது என்பதை அறிந்து, தீா்வுக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக் கட்டடம் விரைவாக கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் மாணவா்களுக்கு அது பயனளிக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com