காரைக்காலில் இலவச இருதய சிகிச்சை முகாம்

உலக இருதய தினத்தையொட்டி, காரைக்காலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
காரைக்காலில் முகாமுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா்.
காரைக்காலில் முகாமுக்கு பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவினா்.

உலக இருதய தினத்தையொட்டி, காரைக்காலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற முகாமை கல்லுாரி முதல்வா் அம்புஜம் தொடக்கிவைத்தாா். பொது மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவா் சக்திவேல், இருதயவியல் பிரிவு மருத்துவா்கள் எஸ். அருண்குமாா், ஆா். பிரவின்பாபு ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

முகாமில் ரத்தப் பரிசோதனை, இசிஜி, எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. சில நோயாளிகள் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். முகாமில் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com