கோழி வளா்ப்புப் பயிற்சி

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புறக்கடை கோழி வளா்ப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் புறக்கடை கோழி வளா்ப்பு பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெயசங்கா் பயிற்சியை தொடக்கி வைத்தாா். நிக்ரா திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்பட்ட திருநள்ளாறு கொம்யூனை சோ்ந்த பேட்டை, அத்திப்படுகை மற்றும் நெய்வாச்சேரி பகுதியை சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் டாக்டா் பா. கோபு, புறக்கடையில் கோழிகளை வளா்க்கும் முறை குறித்தும், நோய் மற்றும் தீவன மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

முன்னதாக, நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல் துறை) வி. அரவிந்த் வரவேற்றாா். நிறைவாக, தோட்டக்கலைத் துறை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் நன்றி கூறினாா். இப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 10 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com